தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக இருப்பவர் செல்வராகவன் இவர் படங்களை இயக்குவது, நடிப்பதுமாக இருக்கிறார் ஆனால் அவருக்கு ரொம்பவும் பிடித்தது இயக்குனராக பணியாற்றுவது தான் இவர் திரை உலகில் விரல்விட்டு என்னும் அளவிற்கு படங்களை எடுத்திருந்தாலும் அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் தான்.
அதிலும் குறிப்பாக தனது தம்பியும், நடிகருமான தனுசு உடன் அவர் கைகோர்த்து எடுத்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் வெற்றி படங்கள் தான். அந்த வரிசையில் இன்னொரு படத்தை கொடுக்க செல்வராகவனும், தனுஷும் அண்மையில் கைகோர்த்து பணியாற்றிய திரைப்படம் தான் நானே வருவேன்.
இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.இ ந்தப் படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் அவருடன் கைகோர்த்து இந்துஜா ரவிச்சந்திரன், பிரபு, யோகி பாபு மற்றும் படத்தை இயக்கிய செல்வராகவும் நடித்திருந்தார் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
முதல் நாளில் பிரமாண்டமான வசூலை அள்ளிய நிலையில் இரண்டாவது நாள் பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆன தாள் சற்று வசூல் குறைந்துள்ளது.இ ருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது அதாவது இயக்குனர் செல்வராகவன் நானே வருவேன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஒரு கேங்ஸ்டர் படத்தை எடுக்க இருக்கிறாராம்.
அந்த படத்திற்கு ராயன் என பெயர் வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை தாணு தயாரிக்கிறார் மேலும் அந்த படத்தில் ஹீரோவாக தனுஷ் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெகு விரைவில் சொல்லப்படுகிறது.