வெள்ளித்திரையில் உடல் எடையை குறைத்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் தான் சிம்பு இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்திற்கு முன்பே சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது மேலும் நேற்று சென்னை எக்மோரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஈஸ்வரன் திரைப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் ஒரு தகவலை கூறியுள்ளார்.
அதில் சிம்புவின் அடுத்த திரைப்படத்தையும் நான் தான் இயக்கப் போகிறேன் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் தற்பொழுது இந்த தகவல் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் சிம்புவின் ரசிகர்கள் பலரும் ஒரே உற்சாகமாக இருக்கிறார்கள்.