தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபளிப்பவர் தான் தளபதி விஜய். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றி கண்டு வருகிறது. அந்த வகையில் தளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது.
சமீபத்தில்தான் தளபதி விஜய் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயற்றியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து இருப்பார் மேலும் அவருடைய நெருங்கிய நண்பர் சஞ்சய் நடிகை ஆண்ட்ரியா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இவர் இந்த திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தை தளபதி விஜய் நடித்து முடித்துள்ளார் இவ்வாறு இந்தி திரைப்படமும் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
தற்போது தளபதி விஜய் தன்னுடைய 66வது திரைப்படத்தில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது இந்த திரைப்படத்தின் இயக்குனர் வம்சி அவர்கள் தான் இயக்கி வருகிறார் மேலும் நாளுக்கு நாளாக இந்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் இணையத்தில் வெளியாகி கொண்டே வருகிறது.
அதாவது இந்த திரைப்படம் ஆனது எமோசனல் கலந்த கமர்சியல் திரைப்படமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தெலுங்கிலும் தளபதி விஜய் உயர்வு குறித்து ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு பல ரசிகர்களையும் கவரும் வகையில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் பிளாஷ்பேக் பகுதி இருப்பதன் காரணமாக தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். விஜய் ஏற்கனவே தெறி பிகில் மெர்சல் போன்ற பல்வேறு திரைப்படங்களில் கேட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் இந்த திரைப்படமும் இரண்டு கதாபாத்திரம் என்பதன் காரணமாக எதிர்பார்ப்பது மிகுந்துவிட்டது.
அதேபோல இந்த திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் இடம் பெற உள்ளதால் இதில் ராஷ்மிகா மந்தனா பெயர் அடிபட்டு வருகிறது. மேலும் இசையமைப்பாளராக தமன் இசையமைக்க உள்ளார் என்பது உறுதியாகிவிட்டது.