மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் – படம் ஒரு அடல்ட்டா.? ஹீரோ, ஹீரோயிகள் யார் யார் தெரியுமா.?

vengat-prabhu
vengat-prabhu

இயக்குனர் வெங்கட்பிரபு சினிமா உலகில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை வைத்து உள்ளார். ஆரம்பத்தில் காமெடி கலந்த படங்கள் எடுத்து வந்த இவர் நடிகர் அஜித்தை வைத்து மங்காத்தா என்னும் ஆக்சன் திரைப்படத்தை கொடுத்திருந்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

அதன்பின் மீண்டும் காதல், ரொமான்ஸ் போன்ற படங்களை எடுத்து வந்த இவர் இப்போ சிம்புவை வைத்து “மாநாடு” என்னும் டைம் லாப் என்கின்ற ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்து தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்.

ஒரு இயக்குனர் அடுத்தடுத்து வித்தியாசமான படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்தது நல்லது என சினிமா உலகில் இருக்கும் பலரும் கூறுகின்றனர் தற்போது வெங்கட்பிரபு அதை செய்து வருவதால் அவரது சினிமா பயணம் தற்போது உச்சியில் இருக்கிறது மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதே ரசிகர்களின் கேள்வி குறியாக இருக்கிறது.

அதற்கு பதிலும் கிடைத்து உள்ளது அதாவது வெங்கட்பிரபு அடுத்ததாக ஒரு டாப் நடிகரை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெங்கட் பிரபுவோ அடுத்ததாக ஒரு அடல்ட் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் ரசிகர்களின் கேள்வி என்றவால் ஒரு பிரமாண்ட படத்தை கொடுத்து விட்டு எப்படி அந்த படத்தை எடுக்கப் போகிறீர்கள் என கேட்டனர்.

அதற்கு அவர் இந்த படத்தை எடுக்க நாங்கள் முன்பு முடிவு செய்துவிட்டோம் இந்த படத்தை வெகு குறைந்த நாட்களிலேயே எடுக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.  நீங்கள் எதிர்பார்ப்பது போல இது  அடல்ட் படமும் கிடையாது காமெடி கலந்த ஒரு வேற லெவல் படம் ரசிகர்களை நிச்சயம் இது கவர்ந்து இழுக்கும் என கூறினால் இந்த படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் நடிக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோயின்களாக ஸ்ருமதி வெங்கட் மற்றும் நடிகை சம்யுக்தா மேனன் போன்றவர்கள் ஹீரோயினாக நடிக்கிறார்களாம் மேலும் பல்வேறு முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளார்களாம்.