இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் தளபதி விஜயை வைத்து தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்தி பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார்.
அதுவும் ஹிந்தியில் டாப் நடிகரான ஷாருக்கானுடன் இணைந்து ஒரு புதிய படத்தை எடுக்க உள்ளார் ஏற்கனவே ஷாருக்கானுக்கு கதையை சொல்லி ஓகே செய்து வைத்திருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவிலேயே புனேவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும் தமிழ் சினிமா நடிகர் நடிகைகளை ஒவ்வொருவராக கமிட் செய்து வருகிறார் அட்லி. அந்த வகையில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கமிட் செய்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வரும் நடிகர் யோகி பாபுவை இந்த திரைப்படத்தில் கமிட் செய்து உள்ளார் அட்லி.
அதை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பிரபல நடிகர்களை ஒவ்வொருவராக தேர்வு செய்து வருவதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது உச்சத்தில் இருக்கின்றது.
இந்தி பக்கம் செல்லாமல் இருந்த நடிகர், நடிகைகளை அவர் இழுத்து போடுவது அந்த படத்திற்கு சாதகமா அல்லது வினையா என்பது போக போக தான் தெரியும் என்கின்றனர் சினிமா பிரபலங்கள்.