சமந்தாவை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷூம் தெலுங்கு பாடலுக்கு செம்ம குத்தாட்டம்.! இதோ அந்த பாடல் வீடியோ.

samantha-and-keerthy-suresh
samantha-and-keerthy-suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்கள் அனைத்திலும் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் தக்க வைத்திருப்பவர் ஆவார். அந்தவகையில் இவர் சினிமாவில் முதல் முதலில் 2013ஆம் ஆண்டு கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர்.

பின்பு மலையாளத்தில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். பின்பு இவர் தமிழில் டாப் ஹீரோக்களான விஜய், சிவகார்த்திகேயன், ரஜினி, சூர்யா போன்ற பல நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் செல்வராகவனுடன் இணைந்து சாணி காயிதம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழை தொடர்ந்து மற்ற மொழிகளான தெலுங்கில் சர்க்காரு வாரி பட்டா மலையாளத்தில் வாஷி ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூக வலைதளங்களிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை கவரும் வகையில் விதவிதமான புகைப்படங்களையும் வழக்கமாக வெளியிட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்.

சமீபத்தில் ஒரு தெலுங்கு பாடலுக்கு நடனமாடியுள்ளார். பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கியுள்ள காயத்ரி என்னும் தெலுங்கு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். தற்போது அந்த பாடலின் முழு வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல் வீடியோ.