சினிமா உலகில் குறைந்த பட்ஜெட் படங்கள் தான் எப்போதும் நல்ல லாபம் பார்க்கும் என பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் கூறுவது வழக்கம். அந்த வகையில் பல படங்கள் வெளிவந்து வெற்றியை ருசித்து உள்ளன ஆனால் அண்மைகாலமாக அப்படி எந்த படமும் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி. சத்யராஜ், ஊர்வசி போன்ற பிரபலங்களை வைத்து வீட்டில விசேஷம் என்ற படத்தை உருவாக்கியிருந்தார் இந்த படம் ஹிந்தியில் வெற்றியடைந்த ஒரு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இந்த படம் வெற்றி பெறுமா.. பெறாத.. என்ற சூழ்நிலை தான் இருந்தது ஆனால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு மிக அருமையாக ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பராக ஓடியது.
இந்தப் படம் ஆரம்பத்திலேயே நல்ல வசூல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது வீட்டுல விசேஷம் திரைப்படம் இதுவரை 10 கோடிக்கு மேல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது . குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தற்போது நல்ல வசூலை அள்ளி வருகிறது இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம்.
கமலின் விக்ரம் படத்தை தொடர்ந்து வீட்டுல விசேஷம் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து சிறப்பாக ஓடுகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி அடுத்தடுத்த பல்வேறு படங்களில் நடிக்கவும் இயக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.