மணிமேகலை, ரம்யா பாண்டியனை தொடர்ந்து புதிய கார் வாங்கி அசத்திய நடிகை கௌரி கிஷன் -விலையை மட்டுமே இவ்வளவு லட்சமா..

gowri kisan

தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன் தமிழில் முதலில் விஜய்சேதுபதி,  திரிஷா நடிப்பில் வெளியான 96 என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் இந்த படத்தில் அவர் இளம்

வயது திரிஷா கதாபாத்திரத்தில் அந்த படத்தில் நடித்து அசத்தியவர். 96 படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் மேலும் ரசிகர்களுக்கு இவரது கதாபாத்திரம் ரொம்ப பிடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 96 படத்தின் ரீமேக் தெலுங்கில் வெளியானது அதிலும் கௌரி கிஷன் நடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து நடிகை கௌரி கிஷன் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது இருப்பினும் அழுத்தமான கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்ந்தெடுத்து சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அந்தவகையில் 96 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷுடன் கர்ணன், விஜயுடன் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

சினிமா உலகில் ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த கௌரி கிஷன் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் க்யூட்டான மற்றும் கிளாமர் புகைப்படங்களையும் அள்ளி வீசுவதால் இவருக்கு தற்போது ரசிகர்கள் மடமடவென உருவாகி உள்ளனர். இப்படி என்ற நிலையில் நடிகை கௌரி கிஷன் மற்ற நடிகைகள் போல இவரும் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

அந்த வகையில் நடிகை கௌரி கிஷன் ஜெர்மனியின் தயாரிப்பான volkswagan taigun காரை வாங்கியுள்ளார் இந்த காரின் விலை சுமார் 19 லட்சத்திலிருந்து 22.5 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. நடிகை கௌரி கிஷன் அந்தக் காருடன் இணைந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

gowri kisan
gowri kisan
gowri kisan