ரஜினியை தொடர்ந்து நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் நடிகருடன் கைகோர்த்த பா. ரஞ்சித் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

pa-ranjith

சினிமா உலகில் இருக்கும் இளம் தலைமுறை இயக்குனர்கள் பலரும் நாம் எதிர்பார்க்காத சிறந்த படத்தைக் கொடுத்து சினிமா பிரபலங்களை  ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். பா ரஞ்சித் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ஏன் கடைசியாக கூட இவர் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் அவரது கேரியரில் பெஸ்ட் படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்தவர்களுக்கும் நல்லது ஒரு அங்கீகாரம் கொடுக்கும்  படமாக இருந்தது. சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

படம் எதிர்பார்த்த அளவிற்கு பேரையும், புகழையும் பெற்றுத் தந்ததோடு வசூல் வேட்டையும் நடத்தியதால் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க தற்போது டாப் நடிகர்கள் காத்து கொண்டு இருகின்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் யாருடன் இணைவார் என மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் இயக்குனர் ரஞ்சித் அமைதியாக இருந்து கொண்டு கையை நகர்த்தி உள்ளாராம்.

இதுவரை இணையாத ஒரு நடிகருடன் இணைந்து உள்ளாராம் அதுவும் நடிப்பிற்கு பெயர்போன சீயான் விக்ரமுடன் இணைந்து அடுத்த படத்தில் பணியாற்றியிருக்கிறார் இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இதை அதிகாரப்பூர்வமாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ விக்ரம் பா. ரஞ்சித் மற்றும் ஞானவேல் ஆகியோர் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் உலாவருகிறது நீங்களே பாருங்கள்.

pa ranjith and vikram
pa ranjith and vikram