தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தற்பொழுதும் சினிமா உலகில் நடித்து கொண்டு வருகிறார் இவரது இடத்தை பிடிக்க தற்பொழுது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணிநடிகர்கள் அவரது இடத்தை பிடிக்க முயற்சித்துக் கொண்டு வந்தாலும் அவர்களுக்கு ஈடு இணையாக செல்வதால் இவரை நெருங்க கூட முடியாமல் இருந்து வருகின்றனர்.
இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு சுமந்து நிற்கிறார் இத்துடன் 45 வருடங்களாக சினிமா வாழ்க்கையில் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்தநிலையில் 45 வருடங்களாக சினிமா உலகில் பயணித்துக் உள்ள ரஜினி அதனை கொண்டாடும் விதமாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சேர்ந்து சிறப்பாக கொண்டாடினார்.
ரஜினி அவர்கள் சினிமா உலகில் தற்போது வரையிலும் நடித்து கொண்டு வந்தாலும் ஒரு பக்கம் அரசியல் கட்சியையும் தொடங்கி தற்போது பயணித்து வருகின்றார் இருப்பினும் அத்தகைய அரசியலை இவர் தீவிர படுத்தாமல் மௌனம் காத்து வருகிறார் இந்த நிலையில் அவர் கடந்த வருடம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அதிரடியாக ஒரு பேட்டி கொடுத்தார்.
ஆனால் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில் அவர் எந்த வேலையும் தொடங்கியது மாதிரி தெரியவில்லை. இந்த நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன மீராமிதுன் அவர்கள் விஜய், சூர்யாவை தொடர்ந்து தற்போது ரஜினியின் பக்கம் திரும்பி உள்ளார்.
தற்பொழுது மீரா மீதுன் ரஜினிகாந்த் சினிமாவில் தனியாக போராடி வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துகள் என்று கூறி, மேலும் உங்கள் அரசியல் கனவு கனவாகவே இருக்கும், எங்கள் மாநிலத்தை விட்டு விலகியே இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்