தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனர் உடன் அடுத்தடுத்து கைகோர்த்துள்ளதால் வருக்கின்ற ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை பயணித்துக்கொண்டிருந்த தளபதி விஜய் அடுத்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமா பக்கம் திசை திரும்பி இருக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவர்தான் இயக்க உள்ளதாக தகவல்கள். தற்பொழுது தனது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 75% முடிவடைந்த நிலையில் நீதி இருக்கின்ற படப்பிடிப்பு தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இது பக்கம் போய்க் கொண்டிருந்தாலும் விஜய் முக்கிய பிரபலங்களின் படப்பிடிப்பிற்கு சென்று அவர்களை வாழ்த்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அதன் புகைப்படங்களை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள marakkar திரைப்படத்தின் செட்டில் தளபதி விஜய் இருக்கும்படியான ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு உண்மையில் தளபதி விஜய் மோகன்லால் மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்களை சந்தித்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது ஆனால் அந்த நபர் யாரென்று சரியாக தெரியாததால் விஜய் அல்லது விஜய் சேதுபதி ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் பலர் அது விஜய் சேதுபதி என்றும் ஒரு சிலர் விஜய் என்றும் கூறிவருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அது தெரிந்துவிடும் என கூறப்பட்டுள்ளது.