குதிரையில் சிட்டாய் பறக்கும் சிறுவன்.! நீங்களே பாருங்க.

nandhakumar
nandhakumar

மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக திண்டுக்கல்லில் உள்ள நத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் செய்யும் செயலை பாராட்டி வருகிறார்கள். திண்டுக்கல்லுக்கு அருகே நத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவருக்கு நந்தகுமார் என்கின்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கார்த்திகேயனின் மகன் நந்தகுமார் சிறிய வயதில் குதிரை வேண்டும் என்று தந்தையிடம் கேட்டதால் அதிக பாசம் வைத்திருக்கும் கார்த்திகேயன் உடனே பந்தய குதிரையை வாங்கி தன் மகனான நந்தகுமார்க்கு அளித்துள்ளார். அந்த வகையில் கார்த்திகேயனும் பந்தயக் குதிரைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார் கார்த்திகேயன் வீட்டிற்கு முன் எப்போதும் இரண்டு குதிரைகள் கட்டி கிடக்கும். இவ்வாறு குதிரை விற்பனையில் லாபம் ஈட்டி வந்த இவர் சில காலங்கள் கழித்து குதிரை விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.

எனவே கார்த்திகேயன் இருந்த குதிரைகளை வித்துவிட்டு சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வந்தார். ஆனால் மகனுக்காக ஒரு குதிரை மட்டும் விற்காமல் வைத்திருந்தார். இந்த நிலையில் பள்ளிக்கு போக ஆரம்பித்த நந்தகுமார் குதிரையிலேயே போய் வந்துவிடுவார்.

இவ்வாறு குதிரை ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட நந்தகுமார் மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தற்பொழுது மின்னல் வேகத்தில் குதிரை ஓட்டிக்கொண்டு ஊரை சுற்றி வருக்கிறார். இவர் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கொரோனா காரணத்தினால் குதிரையை வைத்து கொண்டு காலை, மாலை நேரங்களில்  ஊர் சுற்றுவதும், தங்கை மற்றும் நண்பர்களை குதிரையில் ஏறி பயணம் செய்வது போன்றவற்றை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் குதிரையை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது, உணவு கொடுப்பது, மருந்து போடுவது, உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற செயல்களை குதிரைக்காக செய்து வருகிறார் நந்தகுமார்.

இந்த நிலையில் தற்போது கொரோனவால் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வரும் கார்த்திகேயன் தனது மகன் ஒருநாள் சிறந்த குதிரை ஓட்டுபவனாக வருவான் என்ற நல்ல எண்ணத்தில் நாள்தோறும் ரூபாய் 300 முதல் ரூபாய் 500 வரை குதிரைக்காக செலவழித்து வருகிறார். எனவே தந்தையான கார்த்திகேயனின் நம்பிக்கை வீண் போகாது.