பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் திறமை இருந்தும் சினிமாவில் பெரிதாக பிரபலமடைய முடியாமலும்,சரியான அங்கீகாரம் கிடைக்காதவர்களுக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் சிவகார்த்திகேயன்.
போட்டியாளராக கலந்து கொண்ட இவர் இவரின் சிறந்த காமெடி திறமையினால் தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தனது பேச்சுத் திறமையையும் காமெடி திறமையையும் வெளிப்படுத்தி பல நிகழ்ச்சிகள், அவார்டு பங்ஷன் போன்றவற்றையும் தொகுப்பாளராக பணியாற்றி பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.
இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் காமெடி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு தனது விடா முயற்சியால் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஹீரோ திரைப்படம் பெரிதாக வெற்றியைத் தரவில்லை.
எனவே விட்டதை பிடிக்க வேண்டும் என்பதற்காக டாக்டர் திரைப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.எனவே இத்திரைப்படம் ஓடிடி வழியாக வெளியாகும் என்று படக்குழுவினர் கூறி இருந்தார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் கண்டிப்பாக இத்திரைப்படம் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாராம்.
தற்பொழுது லாக் டவுன் என்பதால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டிலேயே இருந்து வரும் சிவகார்த்திகேயன் தனது வீட்டு மாடியில் தோட்டம் வைத்து உள்ளார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது .அந்த புகைப்படத்தில் தனது மகளுடன் பார்வையிடுகிறார் இதனைப் பார்த்த பலரும் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
என் வீட்டு தோட்டத்தில்… pic.twitter.com/fFB2CYrj8F
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 12, 2021