தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் ஏதோ ஒரு காரணத்தினால் இறந்துள்ளார்கள். இந்த செயல் அனைவருக்கும் மன வருத்தத்தையும், கஷ்டத்தையும் தரும். ஒருவருடைய இறப்பு என்பது அனைவருக்கும் கஷ்டத்தை தரக்கூடியது தான்.
இந்த நிலையில் சினிமா பிரபலங்களில் ஒரு சில நடிகைகள் விமான விபத்தில் சிக்கி இறந்துள்ளார்கள். அந்த வகையில் எந்தெந்த நடிகைகள் விமான விபத்தில் சிக்கி இறந்துள்ளார்கள் என்பதை தற்போது காண்போம்.
சௌந்தர்யா – நடிகை சௌந்தர்யாவின் உண்மையான பெயர் தான் சௌமியா. இவர் 1972ஆம் ஆண்டில் ஜூலை மாதம் கர்நாடகா மாநிலத்தில் பிறந்துள்ளார். 1993ஆம் ஆண்டில் ஆர்.பி உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த பொன்னுமணி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்கத்தங்கம் போன்ற இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சௌந்தர்யா அவர்கள் 2004ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி பெங்களூரில் படப்பிடிப்பு முடித்து விட்டு விமானத்தில் வரும்பொழுது விமான விபத்தில் இறந்துவிட்டார். இவர் கமல், விஜய், ரஜினி என இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடைசியாக விஜயகாந்துக்கு ஜோடியாக சொக்கத்தங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் தான் இவரது கடைசி திரைப்படமாக அமைந்தது.
ராணி சந்திரா – நடிகை ராணி சந்திரா 1949ஆம் ஆண்டில் கேரளா மாநிலத்தில் பிறந்துள்ளார். இவர் 1973ஆம் ஆண்டில் ராதா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து சுவாமி ஐயப்பா, சிந்துதே வானம், பத்ரகாளி என பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ராணி சந்திரா சிவகுமாருடன் இணைந்து பத்திரகாளி திரைப்படத்தின் கடைசி நாள் சூட்டின் முடித்து விட்டு மும்பையில் இருந்து சென்னைக்கு வரும் பொழுது நான் விமான விபத்தில் இறந்துவிட்டார். இவருடைய மரணத்திலும் சோகம் கலந்த சுவாரசியமான விஷயமாக அமைந்திருக்கிறது. அது என்னவென்றால் இவர் ரிட்டன் வந்த விமானத்தில் நடிகர் சிவகுமார் வரவில்லை. ஒரே ஒரு ரிட்டர்ன் டிக்கெட் புக் பண்ணி இருந்த காரணத்தால் யாராவது ஒருத்தவங்க தான் போகணும் என்ற நிலை வந்ததால் ராணி சந்திரா போய் விட்டார்கள். இவருக்கு பதிலாக நடிகர் சிவகுமார் போயிருந்தால் நாம் இன்னைக்கு சிவகுமாரை பார்த்திருக்கவே முடியாது.
ராகினி – பழம்பெரும் நடிகை பத்மினியின் சகோதரி தான் ராகினி. இவர் 1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்துள்ளார். இவர் மந்திரகுமாரி, சிங்காரி, மருமகள், மதுரைவீரன், மன்னாதி மன்னன், வீரபாண்டி கட்டபொம்மன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம், கன்னடம், உருது என பல மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் எம்ஜிஆர் சிவாஜி, எம் டி ராமராவ் போன்ற அனைவருடனும் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகையின் பத்மினியின் இளைய சகோதரி தான் ராகினி. ராகினி அவர்கள் சொந்த விஷயமாக வெளியூர் சென்று வரும்பொழுது தான் விமான விபத்தில் இறந்துள்ளார்.இவர் 1976ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இறந்துள்ளார்.