நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் சுமாரான வசூலை அள்ளின இதிலிருந்து மீண்டு வர அஜித் நடித்த திரைப்படம் தான் துணிவு. அவர் நினைத்தது போல துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது.
படம் வெற்றியை ருசிக்க முக்கிய காரணம் அஜித் நெகடிவ் ரோல் தான் எனக் கூறப்படுகிறது. மேலும் படம் முழுக்க் முழுக்க அஜித் தான் இடம்பெறுகிறார். இவரது நடிப்பு வேற லெவலில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். துணிவு படத்தை பார்த்த பலரும் துணிவுபொங்கல் என பலரும் சொல்லி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படம் முதல் மூன்று நாட்களில் மட்டுமே தமிழகத்தில் 42 கோடி வசூலித்து இருக்கிறது. மற்ற இடங்களிலும் நல்ல வசூலை அள்ளி உள்ளது வருகின்ற நாட்களில் துணிவு படத்தில் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு முக்கிய இடத்தில் போட்ட காசை எடுத்து தற்போது லாபத்தை பார்க்க இருக்கிறது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அஜித்தின் துணிவு திரைப்படம் அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த வருகிறது தற்போது வரை மட்டுமே அங்கு 6 லட்சம் டாலர்கள் வசூல் செய்துள்ளதாம்.
இதன் மூலம் போட்ட காசை மூன்றே நாட்களில் எடுத்து விட்டதாம். இனி வருவதெல்லாம் லாபம் என கூறப்படுகிறது இதனால் நிச்சயம் அமெரிக்காவில் துணிவு திரைப்படம் ஹிட் அடிப்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என சொல்லப்படுகிறது.