வெள்ளித்திரை பிரபலங்கள் போலவே சின்னத்திரை பிரபலங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சீரியல்களின் மூலம் பிரபலமாகும் பிரபலங்கள் ஏராளமானவர்கள் தங்களுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி திருமணம் செய்துக் கொண்டு சீரழிந்த ஐந்து ஜோடிகள் குறித்த பட்டியலை பார்க்கலாம்.
விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா: இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் இணைந்து நடித்திருந்த நிலையில் இதன் மூலம் காதல் ஏற்பட்டு சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணமான 30 நாட்களில் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் தங்களது அந்தரங்க விஷயங்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
ரக்ஷிதா மற்றும் தினேஷ்: இவர்கள் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் இணைந்து நடித்த நிலையில் பிறகு காதலுக்கு திருமணம் செய்து கொண்டார்கள் திருமணமான சில வருடங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்த காரணத்தினால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் சமீபத்தில் ரக்ஷிதா தனது கணவர் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
திவ்யா மற்றும் ஆர்ணவ்: ஐந்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் திவ்யா மூன்று மாதமாக இருக்கும்பொழுது ஆர்ணவ் அடித்து துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதனால் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் சமீபத்தில் திவ்யாவிற்கு குழந்தை பிறந்தும் சமூக வலைதளங்களில் பல அக்கப்போர்கள் நடந்து வருகிறது.
தாடி பாலாஜி மற்றும் நித்யா: பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் பிறகு தொடர்ந்து கருத்து வேறுபாடு வந்ததால் விவாகரத்து பெற்றவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் இவர்களை சேர்த்து வைக்க கமலஹாசன் அவர்களும் பல முயற்சிகளை செய்தார் ஆனால் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
ஜெயஸ்ரீ மற்றும் ஈஸ்வரன்: ஈஸ்வரன் மகாலட்சுமி உடன் இணைந்து நடிக்கும் பொழுது இவர்களுக்கிடையே தகாத உறவு இருப்பதாக ஜெயஸ்ரீ கூறி வந்த நிலையில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் மகாலட்சுமி இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தயாரிப்பாளர் ரவிந்தரை காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ஆனால் ஜெயஸ்ரீ மற்றும் ஈஸ்வரனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது.