நேற்று மும்பை வான்காடே மைதானத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதிக்கொண்டன இதில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷன் 32 ரண்களும் டிம் டேவிட் 31 ரன்கலம் எடுத்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் களையும் சாட்னர் மற்றும் துசார் தேஸ்பாண்டே ஆகியோர்கள் தல இரண்டு விக்கெட் கலையும் கைப்பற்றினார்கள். இந்த நிலையில் 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி முதலில் டிவான் கான்வே டக் அவுட் ஆகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
அதன் பின் களம் இறங்கிய சென்னை அணியின் அறிமுக நாயகனாக ரகானே முதல் பந்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியை நாலா பக்கமும் சிதறடித்தார் இவரின் ஆட்டத்தில் அதிரடியாக மனமடவென ரன்கள் குவிந்தது. மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை பறக்க விட்டதால் ரகானே வெறும் 19 பந்தில் அரசதத்தை எளிதாக எட்டினார்.
இந்த நிலையில் 18.1 ஓவரில் மிக எளிதாக மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. இந்த நிலையில் ரகானே குறைந்த பந்தில் அரசதம் அடித்துள்ளார் இதற்கு முன்பு சுரேஷ் ரெய்னா, மொயன் அலி, தோனி, அம்பத்திராயுடு ஆகியவர்கள் குறைந்த பந்தில் அரசதம் விளாசி உள்ளார்கள்.
அந்த வகையில் சுரேஷ் ரெய்னா 16 பந்தில் அரை சதம் அடித்துள்ளார் இவர் முதலிடத்தை பிடித்துள்ளார் இரண்டாவது இடத்தில் ரஹானே 19 பந்தில் அரை சதம் விலாசியுள்ளார் இவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் மூன்றாவது இடத்தில் மொயன் அலி 19 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். நான்காவது இடத்தில் தோனி 20 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். ஐந்தாவது இடத்தில் அம்பத்தி ராயுடு 20 பந்துகளில் அரை சதம் விலாசியுள்ளார்.
இப்படி சென்னை அணிக்காக குறைந்த பந்துகளில் அரை சதம் வீழ்த்தியுள்ள வீரர்கள் இவர்கள்தான்..