நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை தாண்டி சினிமாவில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகர் சூர்யாவின் வாழ்க்கையை திருப்பிய ஐந்து திரைப்படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
நந்தா :- இயக்குனர் பாலாவுடன் நந்தா படத்தில் இருக்காங்க சூர்யா அவர்கள் முதல் முதலாக கைக்கு ஒத்தார். இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு கேங்ஸ்டர் நடிகராகவும் அதே சமயத்தில் தாய் மீது அக்கறை கொண்டவராகவும் நடித்தார் ஆனால் இதை கடைசி வரைக்கும் புரிந்து கொள்ளாத தாய் சூர்யாவிடம் வெறுப்பு காட்டுகிறார் இதுவே இப்படத்தின் கதை. மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக லைலா அவர்கள் நடித்துள்ளார்.
கஜினி:- ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கஜினி இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா குறுகிய கால நினைவாற்றல் பிறப்பால் பாதிக்கப்படுகிறார், அதையும் மீறி தன் காதலியின் மரணத்திற்கு பழியும் வாங்குகிறார். கஜினி திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி சூர்யாவை ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக மாற்றியது.
வாரணம் ஆயிரம் :- இயக்குனர் கௌதம் மேனன் கூட்டணியில் சூர்யா நடித்த திரைப்படம் தான் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்திருப்பார். அது மட்டுமல்லாமல் இந்த ஒரு படத்திற்காக தனது சிக்ஸ் பேக்கை வைக்க ஆரம்பித்தார். மேலும் இந்த திரைப்படம் இறுதியில் ராணுவத்தில் சேரும் ஒரு இளைஞனின் வாழ்க்கை படமாக உருவாகியது.
சூரரைப் போற்று :- பெண் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் தான் சூரியனைப் போற்று. இந்தத் திரைப்படம் ஏ ஆர் டெக்கான் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை கதையை பற்றியது. சூர்யா அவர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதை சூர்யா அவர்களுக்கு சூரரைப் போற்று படம் பெற்று தந்தது.
சிங்கம்:- இயக்குனர் ஹரியின் கூட்டணியில் உருவான சிங்கம் பல மொழிகளில் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. ஆனால் தனது அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தியதால் அசல் பதிப்பை விட எல்லாவற்றிலும் சிறந்ததாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் சிங்கம் திரைப்படம் மூன்று பாகங்களாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேர்ப்பை பெற்றது.