TRPயில் அதிக புள்ளிகளைப் பெற்ற விஜயின் ஐந்து திரைப்படங்கள்.! என்னென்ன திரைப்படங்கள் தெரியுமா.?

vijay67

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து நிறைய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வரும் நடிகர் தான் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் தற்பொழுது தளபதி 65வது திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் நெல்சன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெட்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மிக வேகமாக தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது இதனைத்தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான நிறைய திரைப்படங்கள் சின்னத்திரையில் அதிக TRP ரேட்டிங்கை பெற்றுள்ளது அது குறித்து தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது ஆம் தளபதி விஜய் நடிப்பில் மொத்தம் 5 திரைப்படங்கள் இந்த வருடம் மக்களிடையே ஒளிபரப்பான TRP ரேட்டிங்கை பற்றி தான் தற்பொழுது தகவல் வைரலாகி வருகிறது.

அதில் மாஸ்டர்,பிகில்,தெறி,கில்லி,திருப்பாச்சி என 5 திரைப்படங்கள் டாப்-5 லிஸ்டில் இந்த வருடம் ஒளிபரப்பான திரைப்படங்களின் TRPயில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது இதனைதொடர்ந்து விஜய் ரசிகர்கள் பலரும் இதே போல் விஜயின் திரைப்படங்கள் பல சாதனைகளை படைக்க வேண்டும் என சமூக வலைதளப் பக்கங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

vijay77
vijay77

அதுமட்டுமல்லாமல் இளைய தளபதி விஜய் நடிப்பில் 66வது திரைப்படம் எப்போது உருவாகும்  இவரது அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.