குறைவான பட்ஜெட்டில் வெளிவந்து கோடிகளில் வசூலை குவித்த ஐந்து திரைப்படங்கள்.! இதில் ஒவ்வொன்றும் தனி ரகம்

movies
movies

சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் கேங்ஸ்டர் திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல கோடி செலவழித்து அந்த படத்தை தயாரித்து வருகிறார்கள் ஆனால் ஒரு சில திரைப்படங்களை வெறும் 1கோடி முதல் 5 கோடி வரை செலவு செய்து அதிக வசூல் செய்து லாபத்தை பார்த்து வருகின்றனர். அப்படி லோ பச்ஜட்டில் செலவு செய்து அதிக லாபம் செய்த திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

காக்கா முட்டை:- 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் சேர்ந்து தயாரித்தார்கள். இந்த படம் இரு சிறுவர்கள் பீட்சா சாப்பிடும் ஆசையை  எதார்த்தமாக காட்டிய திரைப்படம். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படம் ஒரு கோடி பட்ஜெட் செலவு செய்து உருவாக்கப்பட்டது ஆனால் இந்த படம் வெளியாகி 12 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

விசாரணை:- சந்திரகுமார் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் விசாரணை இந்த திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கியிருந்தார். இந்த படம் தேசிய விருதைப் பெற்றுதந்தது மேலும் ஒன்றரை கோடி பட்ஜெட்டில் செலவு செய்து 13 கோடி வரை வசூல் சாதனை செய்தது.

டிமான்டி காலனி :- அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி திரைப்படம் ஒரு திகில் திரைப்படமாகும். இந்த படத்தில் அருள் நிதி, ரமேஷ் திலக், ஆனந்த், அபிஷேக் ஜோசப், ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரெண்டு கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 10 கோடி வரை வசூல் செய்துள்ளது.

எல் கே ஜி :- லியோன் ஜேம்ஸ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எல் கே ஜி இந்த திரைப்படம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சமகால அரசியலை கிண்டல் செய்யும் விதமாகவும் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் மூன்று கோடி செலவில் உருவாக்கப்பட்டடு வெளியாகி 20 கோடி வரை வசூல் செய்தது.

அருவி:- இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்தாண்டு 2017 ஆம் ஆண்டு வெளியான அறிவிப்பு ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை எதார்த்தமாக காட்டியுள்ளது. இந்த படம் ஒரு கோடி பட்ஜெட் செலவு செய்து உருவாக்கப்பட்ட இந்த படம் ஒன்பது கோடி வரை வசூல் செய்தது.