தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகர்கள், இயக்குனர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் இருந்து வருகிறார்கள் அவர்கள் எல்லோரும் முயற்சிப்பது ஆஸ்கர் விருதை எப்படியாவது பெற வேண்டும் என்பதற்காக தான் அப்படி ஆஸ்கர் விருதுக்கு பரிந்திரைகபட்ட தமிழ் சினிமாவை கௌரவ படுத்திய திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருகிறோம்.
தெய்வமகன் :- 1969 ஆம் ஆண்டு இயக்குனர் திருலோக சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் மூன்று வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தெய்வமகன் இந்த திரைப்படம் தான் ஆஸ்கருக்கு தேர்வான தமிழ் முதல் திரைப்படம் ஆகும்.
நாயகன்:- 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் திரைப்படம் நாயகன் இந்த திரைப்படம் தான் முதன் முதலில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலின் திரைப்படம். இந்த படம் மும்பை தாதாவான வரதராஜன் முதலியாரின் வாழ்க்கை திரைப்படம் ஆகும்.
அஞ்சலி:- குழந்தைகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் அஞ்சலி இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்று உள்ளது. இன் நிலையில் அஞ்சலி திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த படத்தில் ஷாமிலி, ரகுவரன், ரேவதி, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.
தேவர் மகன் :- 1992 ஆம் ஆண்டு சிவாஜி மற்றும் கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தேவர் மகன். இந்த திரைப்படத்திற்கு நடிகர் கமல் ஏழு நாட்களில் கதை திரைக்கதை எழுத்து ஆகியவற்றை முடித்து இருந்தார். இந்த படமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
குருதிப்புனல் :- 1995ஆம் ஆண்டு பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்த படத்தில் அர்ஜுன், கௌதமி, நாசர், ஆகியோர் நடித்திருந்தனர். பாடல்களே இல்லாமல் வெளியான இந்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.