2022ல் தமிழகத்தில் 100 கோடிக்கும் மேல் வசூலித்த ஐந்து படங்கள்…

movies
movies

தமிழ் சினிமாவை பொறுத்தவரை 100 கோடி வசூல் என்பது ஒரு சாதாரண விஷயம் தான் ஏனென்றால் ஒவ்வொரு நடிகர்களும் தற்போது படங்களில் முக்கியத்துவம் கொடுத்து நடித்த வருகிறார்கள் அதை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்களும் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள் அப்படி இந்த ஆண்டு வெளியாகி 100 கோடிக்கு வசூல் செய்த படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்தது. கொரோனாவின் தாக்கத்தால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாக நிலையில் கொரோனா முடிந்த பின் இந்த படம் வெளியானது இதற்காகவே ரசிகர்கள் மூன்று வருடம் காத்திருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

டாக்டர் படம் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப் குமார். இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை நிலவிய நிலையில் கலவையான விமர்சனத்தை பெற்றது இருப்பினும் வசூல் ரீதியாக 100 கோடி மேல் வசூல் செய்து வெற்றி பெற்றது.

பிரசாந்த் நில் இயக்கத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான கே ஜி எஃப் சாப்டர் 2. இந்தப் படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படமும் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகிய விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு  ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாஸில், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது உள்ள வசூல் நிலவரப்படி 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.