சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அதன் பிறகு காமெடி நடிகனாக பல திரைப்படங்களில் பணியாற்றி மக்கள் மத்தியில் தனது முகத்தை பதிய வைத்த நடிகர் தான் சூரி இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருக்கிறார்.
என்றும் கூறலாம். மேலும் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த இரண்டாம் பாகம் வெளிவந்துவிட்டால் சூரி மிகவும் புகழ்பெற்று விளங்க வாய்ப்பு இருக்கிறது எனவும் ஒரு சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள் தற்பொழுது சூரி இன்னும் நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக கமிட் ஆகி இருக்கிறார் என ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
விடுதலை திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்த பல இயக்குனர்களும் இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க கதை கூறி வருகிறார்களாம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கும் கொட்டு காளி மற்றும் ஏழு கடல் ஏழுமலை போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம்.
அதனை அடுத்து விக்ரம் சுகுமாரன், துரை செந்தில்குமார் ஆகியோர்கள் இயக்கும் படங்களிலும் சூரி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது இதனை அடுத்து பார்த்தால் வேறு ஒரு திரைப்படத்திலும் அவர் கதாநாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் விரைவில் இதனைப் பற்றி அறிவிப்பு வெளியிடுங்கள் என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் கிட்டத்தட்ட ஐந்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க சூரி இருக்கிறாரா எங்களுக்கு மிகவும் சந்தோஷம் எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.