விஜய் சேதுபதி விஜய் வெற்றிமாறன் என பொது இடத்தில் தாக்கப்பட்ட ஐந்து சினிமா பிரபலங்கள்..!

vijaysethupathi-1

பொதுவாக சினிமா பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் ஒருசிலர்கள் அவர்களை தாக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது அந்த வகையில் சினிமா பிரபலங்களை ரசிகர்கள் பார்த்தவுடன் அவர்களிடம் பேசுவதும் புகைப்படம் எடுத்துக் கொள்வதும் இருந்து வரும் நிலையில் ஒரு சிலர் அத்துமீறி அவர்களை தாக்குவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

அந்த வகைகள் நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு சென்ற போது விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் எட்டி உதைக்க பட்டார் இவ்வாறு வெளிவந்த இந்த செய்தி மற்றும் வீடியோவானது சமூக வலைதள பக்கத்தில் வைரலானது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி ரசிகர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள்.

vijaysethupathi
vijaysethupathi

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது  நாயகன் கமல்ஹாசனின் ரசிகர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார் பின்னர் அவர்களுடைய உதவியாளர்  பத்திரமாக அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்ததாக தலைதூக்கி இருப்பவர் இவர்தான் இவர் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார் அங்கிருந்து செல்லும்போது விழுப்புரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது தளபதியை பார்க்க மிகப் பெரிய கூட்டமே வந்து விட்டது.

vijay -1

அப்போது தளபதி மர்ம நபரால் தாக்க பட்டிருந்தார் உடனே தளபதி விஜய் ரசிகர்கள் அவரை மண்டபத்தின் பின் வழியாக தளபதி விஜய்யை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்.

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன் இவர் தமிழ்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற காவிரி போராட்டம்  ஸ்டெர்லைட் போராட்டம் மற்றும் ஐபிஎல் நடக்கக்கூடாது என சாலை மறியல் போராட்டம் போன்றவற்றில் கலந்து கொண்ட பொழுது காவல்துறை அதிகாரியால் இயக்குனர் வெற்றிமாறன் தாக்கப்பட்டார்.

vetrimaran

தொகுப்பாளர் கோபிநாத் விஜய் டிவியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருந்து வருகிறார் இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சிகள் நடுவராகவும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் திகழ்ந்து வந்தார் அந்த வகையில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறுதி சடங்கின் போது அவரை பார்க்க  சென்ற இடத்தில் போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டார்.

gobinath