சினிமாவைப் பொறுத்தவரை வாரிசு நடிகர்கள் சுலபமாக சினிமாவில் நுழைந்து விடுகிறார்கள் ஆனால் திறமை இல்லாமல் அவர்களால் ஜொலிக்க முடியாமல் போனது. ஒரு சில வாரிசு நடிகர்கள் சினிமாவில் நுழைந்து தனது விடா முயற்சிகள் தற்போது முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு எடுத்துக்காட்டு நடிகர் விஜய் கூட சொல்லலாம். அதேபோல் ஒரு சில வாரிசு நடிகர்கள் சினிமாவில் நடிக்க வந்து ஏமாந்த ஐந்து நடிகர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்கிறோம்.
கௌதம் கார்த்திக்:- 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நவரச நாயகன் கார்த்திக் இவர் பல ரொமான்டிக் படங்களில் நடித்துள்ளார். இதனாலே இவருக்கு பல பெண் ரசிகர்கள் உள்ளனர். அதனைத் தொடர்ந்து கார்த்தியின் வாரிசாக சினிமாவில் நுழைந்த கௌதம் கார்த்திக் கடல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் அவருடைய படம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.
சாந்தனு:- இயக்குனர் நடிகர் திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட விளங்கியவர் பாக்யராஜ் இவரும் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் இவருடைய மகன் சாந்தனு அவர்கள் தேர்ந்தெடுத்த நடித்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை இதனால் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனது.
மனோஜ்:- தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் சினிமாவில் நுழைந்து ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ஹீரோவுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் சினிமாவில் தோற்று போய் உள்ளார்.
சக்தி:- இயக்குனர் பி வாசுவின் மகன்தான் சக்தி. இவர் சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை இதனால் அவர் ஹீரோவாக அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை.
சிபிராஜ்:- ஹீரோ காமெடி வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அச்சு பிசறாமல் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சத்யராஜ் இவரது வாரிசு தான் நடிகர் சிபிராஜ் ஆரம்பத்தில் இவருடைய படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சம் தனக்கு எது வருமோ அதை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.