தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் தனது திரையுலகில் எத்தனையோ நடிகர் நடிகர்களை பழகி இருந்தாலும் அவர்களுடன் பெரிய நட்பு வட்டாரத்தில் இருந்ததில்லை.. இப்படி இருந்தாலும் ஒரு சில பிரபலங்களுடன் இன்னமும் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கிறார் அவர்களுடன் சேர்ந்து படமும் பண்ணி உள்ளார். அந்த ஐந்து பிரபலங்களை பற்றி விலா வாரியாக பார்ப்போம்..
1. பெப்சி விஜயன் : இவர் தென்னிந்திய சினிமா உலகில் பல படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராகவும், நடிகராகவும் நடித்துள்ளார் அப்படிப்பட்ட இவர் அஜித்தின் வில்லன் மற்றும் ஆஞ்சநேயா போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
2. ரியாஸ் கான் : சினிமா உலகில் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வில்லன் நடிகர்களில் ஒருவர் இவர் விஜயகாந்த் தொடங்கி இளம் நடிகர்கள் படங்களில் வரை நடித்துள்ளார் இவர் அஜித்தின் ஜனா, திருப்பதி போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அஜித்திற்கு உடற்பயிற்சி மற்றும் பிட்னஸ் அதிகமாக உதவியை செய்து வருகிறார் ரியாஸ்.
3. பிரகாஷ் ராஜ் : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ இவர் அஜித்தின் ஆசை படத்தில் நடித்து இருவரும் இணைந்தனர். அதன் பிறகு ராசி, பரமசிவன் போன்ற படங்களில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அஜித்தும் பிரகாஷ்ராஜும் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கின்றனர்.
4. மகாநதி சங்கர் : நடிகர் அஜித்குமாருக்கு எத்தனையோ செல்ல பெயர்கள் இருக்கின்றன. அதில் தவிர்க்க முடியாத பெயர் தல இந்த பெயரை முதலில் வைத்தவர் மகாநதி சங்கர் தான் இருவரும் இணைந்து தீனா, துணிவு போன்ற படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5. ரமேஷ் கண்ணா : முதலில் அஜித் இவருக்கு இயக்குனர் வாய்ப்பை கொடுத்தார் அதன் பிறகு இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். ரமேஷ் கண்ணா அஜித் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை பகிர்ந்து கொண்டே வருகிறார் அண்மையில் கூட அஜித் பற்றி இவர் பேசியது பெரிய அளவில் வைரலானது இருவரும் இப்பொழுதும் கூட நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கின்றனர்.