தற்போது அரசியல் மட்டும் இன்றி சினிமாவிலும் தன்னுடைய நெருங்கிய உறவினர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது வழக்கமாக போய்விட்டது அந்த வகையில் என்ன தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் மக்கள் அவர்களை ஏற்றால் மட்டுமே பிரபலமாக வளம் வர முடியும் அந்த வகையில் சகோதரர்களாக சினிமாவில் அறிமுகம் ஆகி ஒருவர் வெற்றி பெற்று மற்றொருவர் இருந்த இடம் தெரியாமல் போன ஐந்து சகோதரர்களை பற்றி பார்க்கலாம்.
பிரபல தயாரிப்பாளரான ஆர்பி சௌத்ரியின் மகன்கள் தான் ஜீவா மற்றும் ரமேஷ் ஆகிய இருவருமே சினிமாவில் நடித்துள்ளார்கள் அந்த வகையில் ஜித்தன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதன் பிறகு ரமேஷுக்கு எந்த ஒரு திரைப்பட வாய்ப்பும் கிடைக்கவில்லை ஆனால் ஜீவா தனக்கான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பெற்று விட்டார் என்றே சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்துடன் கொண்ட நடிகர் தான் டி ராஜேந்திரன் இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு சிலம்பரசன் குறளரசன் 2 மகன்கள் உள்ளார்கள் அதில் சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் குரல்அரசன் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் இதுவரை சரியான வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
அதே போல விஷால் மற்றும் விக்ரம் கிருஷ்ணா பிரபல தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் மகன்கள் ஆவார்கள் இவர்களில் விஷால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார் ஆனால் விஷாலின் தம்பி விக்ரம் கிருஷ்ணா சில திரைப்படத்தில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆனால் அவர் பெருமளவு பிரபலமாகவில்லை.
ஆர்யா சத்யா ஆகிய இருவரும் சகோதரர்கள் அவர்கள் அந்த வகையில் ஆர்யா அறிந்தும் அறியாமல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார் ஆனால் சத்யா புத்தகம் காவியம் போன்ற திரைப்படத்தில் நடித்து திசை தெரியாமல் போய்விட்டார் என்று சொல்லலாம்.
ஏ எல் விஜய் மற்றும் உதயா ஆகிருவரும் சகோதரர்கள் ஆவார்கள் அதில் விஜய் பிரபல இயக்குனராக கால் தடம் பதித்து கிரீடம் மதராசபட்டினம் தெய்வத்திருமகள் தலைவா போன்ற பல்வேறு திரைப்படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் இவருடைய தம்பி உதயா அவர்கள் திருநெல்வேலி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அதன் பிறகு இடம் தெரியாமல் போய்விட்டார்.