Tamil Movies: சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து வந்தாலும் திரையரங்குகளில் தொடர்ந்து 50 நாட்கள் ஆவது ஓடுவது கேள்விக்குறியாக தான் இருந்து வருகிறது. ஆனால் முன்பெல்லாம் குறைவான வசூலை பெற்றாலும் 400 நாட்களை தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்கள் உள்ளது. அப்படி திரையரங்குகளில் 400 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
மூன்றாம் பிறை: பாலு மகேந்திரன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர்கள் இணைந்து நடித்த மூன்றாம் பிறை திரைப்படம் 1982ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி 330 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
பயணங்கள் முடிவதில்லை: 1982ஆம் ஆண்டு ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான பயணங்கள் முடிவதில்லை படத்தில் மோகன், பூர்ணிமா, ஜெயராம் இணைந்து நடித்திருந்தனர் இப்படம் 435 நாட்கள் வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி உள்ளது.
மரோசரித்ரா: 1978ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இப்படத்தை கே பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இதில் கமல்ஹாசன், சரிதா உள்ளிட்ட இன்னும் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் தெலுங்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் சுமார் 500 நாட்கள் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது.
விதி: 1984ஆம் ஆண்டு மோகன், பூர்ணிமா ஜெயராஜ் இணைந்து நடித்த விதி படத்தை கே விஜயன் இயக்கினார் இப்படம் சுமார் 500 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
சந்திரமுகி: 2005ஆம் ஆண்டு பி வாசு இயக்க ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் சந்திரமுகி இத்திரைப்படம் 850 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.