“A” சான்றிதழில் நடித்து மிரட்டிய ஐந்து நடிகைகள்.! அட லிஸ்ட்ட நம்ம குடும்ப குத்து விளக்கும் இருக்கா.?

keerthi-suresh
keerthi-suresh

2022 ஆம் ஆண்டு பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன இந்த நிலையில் A சான்றிதழ் பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை  பெற்ற திரைப்படங்களின் லிஸ்ட்டை இங்கே காணலாம். பொதுவாக நடிகர்கள்தான் A சான்றிதழ் பெற்ற திரைப்படங்களில் நடிப்பார்கள் ஆனால் சமீப காலமாக நடிகைகளும் A சான்றிதழ் பெற்ற திரைப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆண்ட்ரியா போன்ற முன்னணி நடிகைகளும் துஷாரா  விஜயன், பிரகிடா, சம்யுக்தா ஹெட்டே ஆகிய இளம் நடிகைகளும் ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களில் நடித்து மிரட்டி உள்ளார்கள். அந்த வகையில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருப்பதால் மிகவும் போல்டாக நடித்து ரசிகர்களை இந்த ஆண்டு வியக்க வைத்த நடிகைகளை இங்கே காணலாம்.

சம்யுக்தா ஹெக்டே  மன்மத லீலை

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படத்துக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில்  அசோக் செல்வன் நாயகனாக நடித்த மன்மத லீலை என்ற திரைப்படம் A சான்றிதழ் பெற்றுள்ளது இந்த திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன்,  சும்ருதி வெங்கட் என மூன்று நடிகைகள் நடித்திருந்தார்கள் இதில் சம்யுக்தா ஹெக்ட்டே படும் போல்டாக நடித்து மற்ற நடிகைகளை ஓவர் டேக்ஸ் செய்துள்ளார்.

துஷாரா விஜயன்  நட்சத்திரம் நகர்கிறது

ஆர்யா நடிப்பில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் சேலை கட்டிக் கொண்டு கிராமத்து பெண்ணை போல் நடித்தவர் துஷாரா விஜயன் இவர் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை பா ரஞ்சித் அவர்கள் இயக்கியிருந்தார் மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில்  படும் போல்டான பெண்ணாக  நடித்து மிரட்டி இருந்தார். இவர் காளிதாஸ் ஜெயராம் ஆகியவருடன் படும் தாராளமாக நடித்த காட்சிகள் ரசிகர்களை சின்னா பின்னமாக மாற்றியது.

ஆண்ட்ரியா அனல் மேலே பனித்துளி

தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா இவர் நடிப்பில் ஓ டி டி இணையதளத்தில் வெளியாக்கிய திரைப்படம் தான் அனல் மேலே பனித்துளி இந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியாவை மூன்று போலீஸ் அதிகாரிகளே பலாத்காரம் செய்வதும் அவர்கள் மீது புகார் அளிக்க வரும் இடத்தில் மீண்டும் அவர்களிடம் சிக்கி ஆடைகள் அவிழ்க்கப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டுவதுமாக கதை உருவாக்கப்பட்டிருந்தது.

அனல் மேலே பனித்துளி திரைப்படத்தில் மானம் என்பது நம் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கிறது என போல்டாக வசனம் பேசி ஆண்ட்ரியா மிரட்டி இருந்தார்.

பிரகிடா இரவின் நிழல்

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படுவது இயக்குனர் பார்த்திபன் தான் இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் அது மட்டும் இல்லாமல் புதிய புதிய கதையை இயக்கி வெற்றி கண்டு வருபவர் இந்த நிலையில் பார்த்திபன் இயக்கிய நடித்த சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படமான இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட நிர்வாண காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இந்த காட்சிகள் அனைத்தையும் பார்த்த தணிக்கை குழுவை தடுமாறியது இந்த நிலையில் ஆடையில்லாமல் இளம் நடிகை பிரகிட நடித்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இந்த நிலையில் பிரகிட அது குறித்து பேசியப்போது அந்த காட்சியில் நான் ஆடை அணிந்திருந்ததாகவும் அது ஒரு சீட் ஷாட் எனவும் விளக்கம் கொடுத்திருந்தார்.

கீர்த்தி சுரேஷ் சாணி காயிதம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் செல்வராகவன் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சாணி காகிதம் இந்த திரைப்படம் ott இணையதளத்தில் வெளியானது இந்த திரைப்படமும் A சான்றிதழ் பெற்று இருந்தது இந்த திரைப்படத்தில் பொன்னி கதாபாத்திரத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரி மற்றும் வில்லன் அனைவரும் இணைந்து கீர்த்தி சுரேஷை நாசம் செய்து விடுவார்கள் அவர் மீண்டும் அந்த வில்லன்களை வேட்டையாடும் படி கதை அமைந்திருக்கும்.