Tamil actors: ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதைவிட வில்லன் நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அப்படி சமீப காலங்களாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஏராளமான நடிகர்கள் மக்கள் மனதை கவர்ந்து வருகின்றனர். இவ்வாறு வில்லன் கதாபாத்திரத்தின் நடித்து பிரபலமான சில நடிகர்கள் காமெடி பீஸ் ஆகவும் மாறி உள்ளார்கள் அப்படி ஐந்து நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.
ஆனந்த் ராஜ்: 90 காலகட்டத்தில் சத்திர ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமான ஆனந்த் ராஜ் குறிப்பிட்ட காலத்திற்கு வில்லனாக நடித்து மிகப்பெரிய ரீச் பெற்றார். அப்படி பல படங்களில் வில்லனாக நடித்து வந்த ஆனந்தராஜ் ‘தாமிரபரணியில் தலை முழுக’ என்ற டயலாக் மூலம் பேமஸான இவர் தற்பொழுது நகைச்சுவை நடிகராகவே பல படங்களிலும் நடித்து வருகிறார்.
ஒருவேளை சாப்பாட்டுக்கு விஜயகாந்த் சந்தித்த அவமானங்கள்.! ரசிகர்களை கண்கலங்க வைத்த சம்பவம்
மொட்டை ராஜேந்திரன்: சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த மொட்டை ராஜேந்திரன் நான் கடவுள் படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார். இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது அதன் பிறகு பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் வில்லன் நகைச்சுவை நடிகராக காட்டப்பட்டது. எனவே தற்பொழுது வரையிலும் காமெடியனாகவே ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
சென்ராயன்: தனுஷின் பொல்லாதவன் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான சென்ராயன் அதன்பிறகு சிலம்பாட்டம், ஆடுகளம், ரௌத்திரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மூடர்கூடம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதன் பிறகு காமெடி நடிகராகவே மாறிவிட்டார்.
மணிவண்ணன்: தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் காமெடி மற்றும் வில்லனாகவும் மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்த மணிவண்ணன் ஆசைத்தம்பி, சேனாதிபதி, தாய்மாமன், போன்ற பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தார் அதேபோல் காமெடியனாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
மன்சூர் அலிகான்: 90 காலகட்டத்தில் முரட்டு வில்லனாக பல படங்களில் நடித்திருக்கும் இவர் சமீப காலங்களாக காமெடியனாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அப்படி இவர் வில்லனாக நடித்த கேப்டன் பிரபாகரன், நாளைய தீர்ப்பு, செம்பருத்தி, நட்புக்காக போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் பெற்றது.