Top 5 Actors in Tamil: தற்பொழுது எல்லாம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வருடத்திற்கு ஒன்று இல்லை என்றால் இரண்டு என வெளியாகி வருகிறது. அந்த படங்களுக்கு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர் இந்த சூழலில் முன்வெல்லாம் நடிகர்கள் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தால் வருடத்திற்கு 15 படங்களுக்கு மேல் எல்லாம் நடித்துள்ளனர் அப்படி நடித்த ஐந்து நடிகர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரபு: 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக டாப்பில் இருந்து வந்த பிரபு 1988ஆம் ஆண்டு மட்டும் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி அண்ணா நகர் முதல் தெரு, ஒரு சிஷ்யன், உரிமை கீதம், என் உயிர் கண்ணம்மா, என் தங்கச்சி படிச்சவ, மனசுக்குள் மத்தாப்பு, தர்மத்தின் தலைவன், அக்னி நட்சத்திரம், ரத்த தானம், மணமகளே வா, பூவிலி ராஜா, ஒருவர் வாழும் ஆலயம், கலியுகம் உள்ளிட்ட மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தினக்கூலி வேலை பார்த்த ஆறு நடிகர்கள்.!
மைக் மோகன்: மைக் மோகன் சமீபத்தில் மார்க்கெட்டை இழந்து இருந்தாலும் தான் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பொழுது 1984 ல் மட்டும் 19க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்படி ஓ மானே மானே, அன்பே ஓடி வா, நிரபராதி, நெஞ்சத்தை அள்ளித்தா, நலம் நலம் அறிய ஆவல், மகுடி, விதி உள்ளிட்ட இன்னும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விஜயகாந்த்: 80, 90 காலகட்டத்தில் டாப் 3 நடிகர்களில் ஒருவராக இருந்த கேப்டன் 1984ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்படி இந்த 19 படங்களில் ஏராளமான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது.
என்னதான் இயக்குனராக இருந்தாலும் வில்லத்தனத்தில் மிரட்டி விட்ட 5 இயக்குனர்கள்.!
கமல்ஹாசன்: தற்பொழுது வரையிலும் ஆக்டிவாக இருந்து வரும் கமல்ஹாசன் 1977ல் மட்டும் 19 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1978ஆம் ஆண்டிலும் 19 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழை தவிர்த்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட படங்களையும் சேர்த்து மூன்று வருடத்தில் மொத்தம் 56 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1978ஆம் ஆண்டு மட்டும் 21 திரைப்படங்களிலும் 1977ல் 15 திரைப்படங்களிலும் கிட்டத்தட்ட 36 திரைப்படங்களில் இரண்டு வருடத்தில் நடித்துள்ளார்.