Tamil actors: சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளை விட நடிகர்கள் மட்டுமே வயதானாலும் கூட ஹீரோவாக நடித்து கலக்கி வருகின்றனர். அப்படி 70 வயதை கடந்த பிறகும் 30 வயது இளமை மாறாமல் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஐந்து நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.
மம்முட்டி: மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் ரஜினியின் தளபதி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவ்வாறு தற்பொழுது மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானம் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் அப்படி கடைசியாக மம்முட்டி நடிப்பில் காதல் தி கோர் என்ற படம் வெளியானது. இதில் ஜோதிகாவும் நடித்து அசத்தியிருந்தனர். மம்முட்டிக்கு 72 வயதாகும் நிலையில் தனது இளமை மாறாமல் அதே ஸ்டைலுடன் தற்பொழுது வரையிலும் நடித்து வருகிறார்.
Biggboss 7 : அர்ச்சனாவை தாக்கி பேசிய நிக்சன்.. இது போதுமா இன்னும் வேணுமா.. குவியும் பாராட்டுகள்
ஷாருக்கான்: பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான ஷாருக்கான் 52 வயதை கடந்த பிறகும் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் சிக்ஸ் பேக்குகள் வைத்து இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். சமீபத்தில் ஜவான் போன்ற படங்கள் இவருடைய நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
கமல்ஹாசன்: தனது நான்கு வயதிலேயே சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது வரையிலும் பல சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படங்களை தந்து வரும் கமல் 69 வயதை எட்டியுள்ளார். தற்பொழுது இவருடைய நடிப்பில் இந்தியன் 2, தக் லைப் போன்ற படங்கள் உருவாகி வருகிறது.
அனில் கபூர்: 66 வயதை கடந்த பிறகும் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை தயாரித்து வரும் அனில் கபூர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சைஃப் அலி கான்: பாலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் நடிகை கத்ரீனா கபூரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்பொழுது 53 வயதை கடந்திருக்கும் நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் விளம்பரங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கும் இவர் இளமையான தோற்றத்தில் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.