சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் நவாசுதீன் சித்திக் தற்பொழுது ஹெடிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எனவே இந்த படத்திற்காக தன்னுடைய ட்ரான்ஸ்ஃபார்ம் ஆயிருக்கும் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் நிலையில் தற்பொழுது அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதாவத திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் திருநங்கை உட்பட இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் நவாசுதீன். இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 38 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மேலும் அதில் ட்ரான்ஸ்ஃபார்மை காட்டியிருக்கிறார். மேலும் அதில் குர்தா அணிந்து கொண்டிருக்கும் நடிகரின் கண்களில் இம்மை, லிப்ஸ்டிக் மற்றும் நீண்ட முடிக்காக விக் ஆகியவை பொருத்தப்படுகிறது.
இவர் இந்த வீடியோவை தான் நவாசுதீன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தினை ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ஆனந்திதா ஸ்டுடியோவின் ராதிகா நந்தா மாற்றம் சஞ்சய் சாஹா ஆகியோர்கள் தயாரித்து வருகிறார்கள் மேற்கு உத்தரப்பிரதேசத்தை சுற்றியுள்ள நொய்டா மற்றும் காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
மேலும் இதற்கு முன்பு பாம்பே ஸ்டைலுக்கு அளித்த பேட்டியில் தனது மகள் முதல் முறையாக தன்னை பெண் வேடத்தில் பார்த்து வருத்தப்படுவதாகவும் இறுதியில் அது ஒரு படத்திற்காக என்பதை உணர்வதாகவும் தெரிவித்திருந்தார். நடிகர் நவாசுனீத் ஹாடி படத்தின் அனுபவத்திற்கு பிறகு நடிகைகள் மீதான மரியாதை பல மடங்கு அதிகரிப்பதாகவும் பிறகு ஒரு நடிகை தனது வேனில் இருந்து வெளியே வருவதற்கு ஏன் ஆண் நடிகரை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று இப்பொழுது எனக்கு புரிகிறது.
இது முற்றிலும் நியாயமானது என்றும் அவர் வெறும் நடிப்பு மட்டும் இன்றி முடி, ஒப்பனை, உடைகள், நகங்கள் உள்ளிட்ட பலவற்றை பெண்கள் கவனித்து கொண்டிருக்க வேண்டியது உள்ளது எனவும் நவாசுதீன் கூறியுள்ளார். இவ்வாறு நடிகர் நவாசுதீன் நடிகைகளை பற்றி மிகவும் பெருமையாக பேசி இருக்கும் நிலையில் இது குறித்து வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பலரும் நவாப்சுதீனை பாராட்டி வருகிறார்கள்.
Here’s a sneak peek into my transformation in #Haddi#Haddi releasing in 2023.@ZeeStudios_ @AkshatAjay @piyushputy #AdamyaaBhalla #SubhashShinde @ZEE5India @ZeeMusicCompany @zeecinema pic.twitter.com/qgGKGDed7x
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) December 13, 2022