Actor vijay’s First review of the master film: வைரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளதால் எந்த திரைப்படமும் வெளியிடாமல் அப்படியே முடங்கியுள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்காக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாகவும் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார்கள். இவர்களின் காம்பினேஷனில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு மக்கள் ஆவலுடன் உள்ளார்கள்.
இந்த படத்தில் மாளவிகாவுக்கு டப்பிங் பேசியவர் ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் நடித்த ரவீனா என்பவராவார். டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதால் இந்த படத்தின் முழு கதையையும் திறைக்கு வருவதற்கு முன்பே பார்த்துவிடுவார். அந்த வகையில் படத்தை பார்த்த ரவீனா இந்தளவுக்கு துணிச்சலாக விஜய் நடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்று படம் வெளிவந்த பிறகுதான் தெரியும் எனக் கூறியுள்ளார்.
ரவினாவின் இந்த பேச்சால் விஜய் ரசிகர்களுக்கு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.