“நானே வருவேன்” படத்தின் முதல் விமர்சனம்..! படம் எப்படி இருக்கு தெரியுமா.? பிரபலம் வெளியிட்ட தகவல்..

naane-varuven
naane-varuven

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார் இவர் அண்மை காலமாக சூப்பர் சூப்பரான படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன்..

இந்த படத்தை தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தை கலைக்குழு தயாரித்து உள்ளார் இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து இந்துஜா, யோகி பாபு, செல்வராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படம்  செப்டம்பர் 29ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

படம் வெளிவருவதற்கு முன்பாக ரசிகர்களையும்,மக்களையும் கவர்ந்திழுக்க படக்குழு.. தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்துள்ளது இதுவரை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவற்றை வெளியிட்டன அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இருந்து இரண்டு மூன்று பாடல்களையும் ரிலீஸ் செய்து உள்ளது.

ஒவ்வொன்றும் ரசிக்கும் படியும் மிரட்டும் வகையில் இருந்து வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது மற்றும் படத்தின் ரன்னிங் டைமையும் சொன்னது. இப்படி இருக்கின்ற நிலையில் வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினரும், திரைப்பட விமர்சகரமான உமைர் சந்து..

நானே வருவேன் படத்தை பார்த்துவிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றே போட்டு உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது நானே ஒருவன் படத்தின் சென்சார் திரையிடல் முடிந்தது இந்த படத்தில் தனுஷின் நடிப்பை பற்றி பேச வார்த்தையே இல்லை.! 2022 அவருக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார்.. இச்செய்தி தற்போது தனுசு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த தகவலை..