Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து இளம் இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்கிறார் அந்த வகையில் நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். படத்தின் மோகன்லால், சிவ ராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஜெயிலர் திரைப்படத்தின் படபிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் அடுத்ததாக போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஜெயிலர் படத்தை பார்த்த சென்சார் படக்குழு U/A சான்றிதழ் வழங்கியது.
அது மட்டுமல்லாமல் படம் எல்லோரும் பார்த்து செய்து கொண்டாடும் ஒரு படமாக வந்திருப்பதாக பயிலான் கூறினார் அந்த வீடியோவில் மேலும் ரஜினி எத்தனையோ படங்களில் எத்தனை விதமான கெட்டப்புகளில் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள் ஆனால் இந்த ஜெயிலர் படத்தில் ரஜினி புதிய கெட்டப்பில் ரசிகர்கள் கவர உள்ளார்.
நெல்சன் ஜெயிலர் படத்தை சூப்பராக எடுத்துள்ளார் அவரின் பலமே பயங்கரமான டார்க் காமெடி தான் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படங்களில் இடம்பெற்ற டார்க் காமெடி விழுந்து விழுந்து சிரித்தது அந்த இரண்டு படங்களும் ஹிட் அடித்தன.
ஆனால் விஜய்யின் பீஸ்ட் படத்தில் டார்க் காமெடி குறைத்து ஆக்ஷனில் அதிகம் கவனம் செலுத்தியதால் சொதப்பியது. ஜெயிலர் படத்தில் நெல்சன், ரஜினி முழு சுதந்திரம் கொடுத்து விட்டார் அதன் காரணமாக படம் சூப்பராக வந்துள்ளது நிச்சயம் தியேட்டரில் வசூல் மழை நான் என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.