2022 தனுஷ் வருடம் தான்..! நானே வருவேன் திரைப்படத்தின் முதல் விமர்சனம்.! பிரபலம் அதிரடி பதிவு..

naane-varuven
naane-varuven

நானே வருவேன் திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளார் ஒருவர் அவர் கூறியதாவது 2022 ஆம் ஆண்டு தனுஷ் வருடம் என கூறியுள்ளது சினிமா பிரபலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியாக்கிய திருச்சிற்றம்பலம் ரசிகர்களுடைய நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் 100 கோடி வரை வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது இதற்கு முன் வெளியாகிய தனுஷ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதால் திருச்சிற்றம்பலம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ஓடிடியில் இணையதளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கியுள்ள நானே வருவேன் திரைப்படம் வருகின்ற 29ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து 30 ஆம் தேதி  பொன்னியின் செல்வம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது அப்படி இருக்கும் நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ரிலீஸ் ஆவதால் மிகப்பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் நானே வருவேன் திரைப்படத்தின் டீசருக்கு பிறகு இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுடைய அதிகரித்துள்ளது. இதழியல் வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினரும் திரைப்பட விமர்சகர்மான உமர் சந்து என்பவர் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு தன்னுடைய சமூக வலைதளத்தில்  முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறுகையில் நானே வருவேன் திரைப்படத்தின் சென்சார் பதிவு பார்த்தேன் தனுஷின் நடிப்பை பார்த்து பிரமித்து விட்டேன் 2022 ஆம் ஆண்டு அவருடைய ஆண்டு தான் என கூறியுள்ளார் ஏற்கனவே இந்த வருடத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நானே வருவேன் திரைப்படமும் அதே போல் மிகப்பெரிய வரவேற்பை பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தனுஷ், எல்லி அவ்ராம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரசன்னா பட தொகுப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.