தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளிவர காத்திருக்கிறது இதனால் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்திற்காக பட குழு தீவிரமாக பிரமோஷன் செய்து வருகிறது. மேலும் வாரிசு திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகிய நிலையில் படத்திற்கு இந்த இரண்டு பாடல்களும் பக்கபலமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சினிமா பிரிபலம் ஒருவர் பிரபல இயக்குனர் விஜயை வைத்து ஒரு படம் எடுக்க தயாராக இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அதைக் கெடுத்து விட்டதாக கூறி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கலக தலைவன் திரைப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி.
இவர் நடிகர் விஜய்யிடம் இரண்டு கதைகளை கூறியிருக்கிறார் அந்த இரண்டு கதையும் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதாம் அதனால் விஜய் அவர்கள் உங்களுக்கு இந்த இரண்டு கதையில் எந்த கதை நன்றாக இருக்கிறதோ அந்த கதையை வைத்து படம் எடுக்கலாம் என்று விஜய் அவரே கூறி இருக்கிறார்.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் அப்போது அவருடைய படத்தில் அதாவது கலக தலைவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் என்னுடைய படத்தை முடித்துவிட்டு அப்புறம் விஜய் படத்தை எடுக்கலாம் என கூறி செக் வைத்துவிட்டாராம். இல்லையென்றால் மகிழ் திருமேனி லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன்க்கு முன்னாடியே விஜய்யை வைத்து படத்தை இயக்குவதாக இருந்தது.
உதயநிதி ஸ்டாலின் அப்படி சொன்னதும் வேறு வழி இல்லாமல் விஜய்யின் கால்ஷிட் மறுக்கப்பட்டதாக சினிமா பிரபலம் ஒரு பேட்டியில் கூறி தற்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் உதயநிதி நடிப்பில் வெளியான கலக தலைவன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.