இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது இந்தப் போட்டி மிகவும் முக்கியமானது. இந்திய நேரப்படி 11:30 மணிக்கு நேப்பியர் நகரில் டாஸ் போடப்பட இருந்தது இந்த நிலையில் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால் கொஞ்சம் காலதாமதம் ஆனது.
மைதானம் முற்றிலும் தயாராகிய பிறகு சில நிமிடங்களுக்கு முன்னர் போடப்பட்ட டாஸில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி பேட்டிங் தேர்வு செய்தார் அதன் பிறகு இந்திய அணி பவுலிங்க்கு தயாராகியது. இது மூன்றாவது t20 போட்டி என்பதால் இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஏனென்றால் கடந்த இரண்டாவது போட்டியில் சில வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காததால் இந்த போட்டியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்தார்கள்.
அந்த வகையில் இந்த போட்டியில் இந்தியா அணியில் ஒரே ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது தமிழக கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தரை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் பட்டேல் அணைக்கு கொண்டு வந்துள்ளார்கள் அதன் பிறகு இந்திய அணையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை இன்றைய கிரிக்கெட் போட்டியில் 1) இஷான் கிஷன், 2) ரிஷப் பண்ட், 3) சூரியகுமார் யாதவ், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தீபக் ஹூடா, 7) புவனேஷ்வர் குமார், 8) ஹர்ஷல் பட்டேல், 9) அர்ஷ்தீப் சிங், 10) முகமது சிராஜ், 11) யுஸ்வேந்திர சாஹல். என வீரர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
முதல் ஓவரா வீசிய இந்திய அணியின் அர்ஷ்தீப் இரண்டு பால் வைடு கொடுத்துள்ளார் பின்பு ஒரு விக்கெட்டை தூக்கினார்.