தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூர்யா இவர் தமிழ் திரை உலகில் வித்தியாசமான பல படங்களை கொடுத்து வருகிறார். அப்படி ஆரம்ப காலகட்டத்தில் சரியான படவாய்ப்புகள் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த இவர் மற்ற நடிகர்களின் படங்கள் இவருக்கு கை கொடுத்தன அப்படி வந்த படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தற்போது முன்னணி நடிகராக பயணித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடித்து 2003 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் காக்க காக்க இத்திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து ஜோதிகா, டேனியல் பாலாஜி, ஜீவன், ரம்யா கிருஷ்ணன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர் திரைப்படத்திற்கு முதலில் ”பின்குறிப்பு” என பெயர் வைக்கப்பட்டது சில காரணங்களால் தலைப்பை நீக்கிவிட்டு காக்க காக்க என மாற்றினார்.
இந்த நிலையில் காக்க காக்க படத்தை இயக்கிய இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அவர்கள் இப்படத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் அவர் கூறியது நான் முதலில் இந்தக் கதையில் ஜோதிகாவிற்கான ரோல்ளை எழுதிவிட்டு நான் அவரிடம் இதைப் பற்றி சொல்ல முயன்றேன் அப்பொழுது அவர் கதையை முழுவதுமாக பலமுறை சொன்னேன்.
அதன் பிறகு அவர் இந்த இரண்டு நடிகர்களில் யாரேனும் ஒருவர் நடிக்கலாம் என கூறினார் அது வேறு யாருமில்லை அஜித் மற்றும் விக்ரம் ஆகிய இவர்கள் யாராவது ஒருவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறி என்னை அவர்களிடம் அனுப்பி வைத்தார். ஒரு சில காரணங்களால் அவர்கள் இருவரும் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை அதன்பின் ஜோதிகா என்னிடம் ஒரு படத்தைப் போட்டுக் காட்டி எப்படி இருக்கு என்று கேட்டார் எனக்கு சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததால் அவரை இப்படத்தில் கமிட் செய்தேன்.
மேலும் இப்படத்திற்காக அவர் பல ரிஸ்களை எடுத்து உள்ளார் இப்படத்தில் சூர்யாவின் கண் சிவப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்களுக்கு மேலாக அவர் சாப்பிடாமல் இருந்தால் மேலும் தலைகீழாக நின்று கண்கள் ரத்த நிறத்தில் வருவதற்காக ரிஸ்க் எடுத்தார் என குறிப்பிட்டார்.