தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பேட்ட மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற பல இடங்களில் நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா,குஷ்பூ,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் போன்ற பல முன்னணி நடிகைகள் நடிப்பதால் இந்த திரைப்படத்தை ரஜினியின் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வெளியானால் பல கோடி வசூல் செய்து விடும் எனவும் பல சினிமா பிரபலங்கள் கூறிவருகிறார்கள். அதற்கு ஏற்றது போல் இந்த திரைப்படத்தின் கதை மிகவும் அருமையாக இருக்கிறதாம் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் இன்று காலை 11 மணியளவில் ரஜினியின் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.
அதன் படி தற்பொழுது ரஜினியின் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் மிரட்டலாக வெளிவந்துள்ளது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விட்டதால் ரஜினியின் ரசிகர்கள் பலரும் தற்போது இதனை கொண்டாடி வருகிறார்கள்.
#AnnaattheFirstLook @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals#AnnaattheDeepavali pic.twitter.com/pkXGE022di
— Sun Pictures (@sunpictures) September 10, 2021
அதுமட்டுமல்லாமல் தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் தல அஜித் எப்படி இருப்பாரோ அதைபோல் இந்த பஸ்ட் லுக் போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருப்பதால் விஸ்வாசம் போல் இந்த திரைப்படத்தின் கதை இருக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.