தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அருண் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் தன்னுடைய பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்.
மேலும் இவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர்கள் வெளியிட்டு உள்ளார்கள்.
அந்த போஸ்டரில் அருண் விஜய் குழந்தையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு தன்னுடைய தோளில் பேக் மாட்டி உள்ளார். இந்த போஸ்டர் தான் தற்பொழுது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தை ஸ்ரீரடி சாய் மூவிஸ் தயாரித்துள்ளது.
மேலும் இவர்களைத் தொடர்ந்து நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவ்வாறு திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். திரில்லர் படமான இந்த படம் தந்தை மகள் உறவை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இந்த படம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புரை பெற்ற திரைப்படம் தான் யானை. இவ்வாறு இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அச்சம் என்பது இல்லையே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks team #AchchamEnbadhuIllayae & Dir #Vijay Sir for surprising me on my b’day with this fantastic poster. More exciting updates soon!!@iamAmyJackson @NimishaSajayan@gvprakash
Prod by @SSSMOffl Rajashekar & Swathi @shiyamjack @DoneChannel1 pic.twitter.com/rSrmO5bJMZ
— ArunVijay (@arunvijayno1) November 19, 2022