நகைச்சுவை படத்தில் நடித்திருக்கும் நடிகை அனுஷ்காவின் பரிதாப நிலை.! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..

ANUSHKA
ANUSHKA

பொதுவாக நடிகைகளை பொருத்தவரை சினிமாவில் தொடர்ந்து எந்த நடிகையாலும் டாப் முன்னணி நடிகையாக வலம் வர முடியாது என்னதான் அவர்கள் தங்களுடைய இளமைக் காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்து வந்தாலும் கூட குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மார்க்கெட் குறைந்து திரைப்படங்களில் நடிக்க தள்ளாடிவரும் பல நடிகைகள் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் தென்னிந்தியா சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் விக்ரம், சூர்யா, ஆர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் பிரபலமாக இருந்து வந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருடைய மார்க்கெட் சினிமாவில் குறைந்தது.

அந்த வகையில் இவர் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து பாகுபலி திரைப்படத்தின் நடித்திருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றினை கண்டார். இந்த படத்திற்கு பிறகு சொல்லும் அளவிற்கு இவருடைய படங்கள் வெற்றி பெறவில்லை மேலும் ஆர்யாவுடன் இவர் இணைந்து நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படம் தான் பெரிய மைனஸ்சாக அமைந்தது.

அதாவது இஞ்சி இடுப்பழகி படத்தில் தன்னுடைய உடல் எடையை பல மடங்கு அதிகரித்த நிலையில் பிறகு உடற்பயிற்சி செய்தும் தற்போது வரையிலும் தன்னுடைய பழைய நிலைமைக்கு வர முடியவில்லை. இதனால் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை அப்படி கிடைத்தாலும் கூட சினிமாவிற்கு அறிமுகமாகும் நடிகர்களின் படங்களில் தான் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் நடித்திருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தினை யூ.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, பி மகேஷ் இயக்க, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி உள்ள இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு “மிஸ் ஷெட்டி, மிஸ்டர் போலிஷெட்டி” ஏன்னா பேரவைக்கப்பட்டுள்ளது கோடை விடுமுறையில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா தற்பொழுது பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் இப்படி ஒரு படத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.