முதலில் அப்பாவுக்கு சோறு போடுங்க அப்பதான் வாரிசுக்கு மரியாதை.! கொளுத்திப்போட்டா இயக்குனர்..

vijay
vijay

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது இப்படம் தெலுங்கு திரைபறையில் வெளியிட சில பல பிரச்சனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முழுக்க முழுக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம்தான் காரணம் என கூறப்படுகிறது இந்த நிலையில் இதற்கு பலர் ஆதரவாக இருந்து வருகின்றனர். வாரிசு திரைப்படம் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது இதனால் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலை தனியார் தொலைக்காட்சி நடத்திய விஜயின் வாரிசு அரசியல் குறித்து பேசிய நடிகை கஸ்தூரி, பத்திரிகையாளர் பிஸ்மி, இயக்குனர் பிரவீன் உள்ளிட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களுடைய கருத்துக்களை கூறி வந்த இவர்கள் ஒரு மிகப்பெரிய விவாதமே நடந்து இருந்தது. அப்போது இயக்குனர் பிரவீன் காந்தி விஜயின் மீது ஒரு வேண்டுகோள் இருக்கிறதாக கூறியுள்ளார் அதாவது விஜயின் வாரிசு என்ற டைட்டில் இருக்கிறது இது எதற்கு, அப்பாவுக்கு பிரச்சனை இருப்பதை சரி செய்வது என்பது தானே இந்த படத்தின் கதையாக இருக்கும்.

அப்படி வாரிசு என்ற டைட்டிலை வைத்துக்கொண்டு அப்பா கூட பேசாமல் சண்டை போடுகிறது ரொம்ப தப்பான விஷயம் தானே எப்படி ரசிகர்களை கூப்பிட்டு சாப்பாடு போட்டு மரியாதை செய்கிறாரோ அதேபோல தனது அப்பாவை கூப்பிட்டு மரியாதை செய்ய வேண்டும் அப்போதான் வாரிசு டைட்டிலுக்கு மரியாதையாக இருக்கும்.

ஊடல் போல இந்த சண்டை தெரியவில்லை  ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டிய அன்பு, பாசம், அக்கறை அனைத்தையும் அப்பாவுக்கும் கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் பிரவீன் காந்தி ஒரு கோரிக்கையாக கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.