தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். இவர் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் இந்த படம் வெளியே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா, நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மேலும் லத்தி திரைப்படத்திற்காக நடிகர் விஷால் பல இடங்களுக்குச் சென்று பிரமோஷன் செய்து வருகிறார். அந்த வகையில் திருச்சி, சேலம், கோயம்புத்தூர், என பல ஊர்களில் சென்று தன்னுடைய படத்திற்கு பிரமோஷன் செய்து வருகிறார். மேலும் லட்சத்தி திரைப்படத்தில் நடிகர் விஷால் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் லத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஷால் அவர்கள் சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார். அப்போது மேடையில் தன்னை ஒரு நபர் “நாய்” என்று திட்டி உள்ளதாக கூறியுள்ளார்.
அதாவது நடிகர் ராதாரவி நடிகர் விஷாலை முதலில் “நாய்” அப்புறம் “பரதேசி நாய்” என்று கூறியுள்ளாராம். இதற்கு பதில் அளித்த நடிகர் விஷால் பரவாயில்லை முன்பை விட தற்போது நான் முன்னேறி உள்ளேன் என்று கூறியுள்ளார். ராத ரவி பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும், நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் அதே சமயத்தில் விமர்சகராகவும் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.