பயமா எனக்கா.? நாங்க எல்லாம் சுனாமியிலேயே சுவிமிங்க போடுவோம்.. முதல் நாள் பிரம்மிக்க வைத்த ராயன் வசூல்.?

raayan first day collection
raayan first day collection

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது தன்னுடைய ஐம்பதாவது திரைப்படமாக ராயன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ஜூலை 26 படும் மாஸாக வெளியே வந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் அவர்களுடன் இணைந்து துஷாரா விஜயன், சந்திப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ், ஜெயராமன், செல்வராகவன் ,நித்யா ராமன், எஸ் ஜே சூர்யா, அறந்தாங்கி நிஷா, என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்திருந்தார்கள்.

நடிகர் தனுஷ் நடிகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார் மேலும் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் ஹாலிவுட் என கொடிகட்டி பறந்து வருகிறார். அப்படி இருக்கும் நிலையில் தனுஷ் நடித்துள்ள ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கியுள்ளார். மேலும் தன்னுடைய அண்ணன் செல்வராகவனை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறுவயதிலேயே ரத்தத்தை பார்த்த தனுஷ் இந்த திரைப்படத்தில் கடைசியில் தன்னுடைய தம்பியை காப்பாற்ற எப்படி போராடுகிறார் என்பதுதான் படத்தின் கதை ராயன் திரைப்படம் முன்பதிவிலேயே அதிக வசூலை பெற்றது. அது மட்டும் இல்லாமல் முதல் நாள் வசூலில்அதிக வசூல் செய்து மாபெரும் சாதனை படத்துள்ளது. தனுஷ் திரைப்பயணத்திலேயே முதல் நாள் அதிக வசூலை ஈட்டிய தரைப்படம் ராயன் தான் என தற்பொழுது தெரியவந்துள்ளது.

முதல் நாள் முடிவில் ராயன் திரைப்படம் உலகம் முழுவதும் 17.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கணித்துள்ளார்கள்.