சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு.? வியப்பில் ரசிகர்கள்.

simbu
simbu

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்து பேரையும், புகழையும் பெற்றவர் நடிகர் சிம்பு. பின் ஹீரோவாக தொடர்ந்து ஆக்சன், காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றி மேல் வெற்றியை கண்டார் சினிமா உலகில் ஹீரோவாக மட்டும் பயணிக்காமல் இயக்குனராகவும், நடன கலைஞராகவும் தன்னை வளர்த்துக்கொண்டு அசத்தியவர்.

சினிமா உலகில் வெற்றியை மட்டுமே கண்டு இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு தோல்வி படங்களாக அமைந்தது மேலும் சரியாக படப்பிடிப்பு தளத்திற்கு போகாமல் இருந்ததால் இவர் வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது இதனால் சினிமா உலகில் அவர் காணாமல் போனார் இனிமேல் சிம்பு தலைகாட்ட மாட்டார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அதிரடியாக..

தனது எண்ணத்தை மாற்றி உடல் எடையை குறைத்து மீண்டும் கம்பேக் கொடுத்து நடித்து வருகிறார் சிம்பு கடைசியாக நடித்த மாநாடு திரைப்படம் 100 கோடி வசூல் அள்ளி சாதனை படைத்தது அதனை தொடர்ந்து தற்பொழுது வெந்து தணிந்தது காடு படம் உருவாகி உள்ளது இந்த படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு கையில் பத்து தல படமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்து தற்போது கணக்கிடப்பட்டுள்ளது அதாவது இந்த படத்தின் பாடல், ட்ரெய்லர் போன்றவை பிரமாதமாக இருந்து

வந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது அதனால் இந்த படம் உலக அளவில் முதல் நாளில் மட்டுமே 15 கோடியை வரை வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது இந்த படம் நன்றாக அமையும் பட்சத்தில்  100 கோடியை தொடவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.