இயக்குனர் வம்சி இயக்கத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் தமிழகத்தில் துணிவை விட குறைந்த வசூல் செய்திருந்தாலும் மற்ற மாநிலங்களில் ஒரு சில இடங்களில் துணிவை விட அதிக வசூலை ஈட்டி வருகிறது.
இதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படங்கள் ஒரே தேதியில் வெளியானதை தொடர்ந்து இந்த இரண்டு படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். கடந்த எட்டு வருடங்களாக விஜய் அஜித் மோதிக்கொள்ளாத நிலையில் தற்போது துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் மூலம் மோதிக்கொண்டனர்.
இதனால் இந்த படங்களின் மீது ரசிகர் மத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வரும் இந்த இரண்டு படங்களும் தற்போது வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் நான்கு நாட்கள் முடிவில் துணிவு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. அனால் வாரிசு படம் 100 கோடியை தொட மிகவும் கஷ்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தெலுங்கில் வாரசுடு என்று வெளியான வாரிசு படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூலிலும் லாபம் பார்த்து வருகிறது அந்த வகையில் நேற்று வெளியான வாரசுடு படத்தின் முதல் நாளில் மட்டும் ஐந்து கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
துணிவு திரைப்படம் தெலுங்கு மற்றும் கர்நாடக பகுதிகளில் 3.5 கோடி மட்டும் தான் வசூலித்து உள்ளது ஆனால் வாரிசு 5 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது அதுமட்டுமல்லாமல் தற்போது வாரிசு திரைப்படம் 100 கோடியை தாண்டி 121 கோடி வசூலித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.