அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இதுவரைக்கும் பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் துணிவு படத்தின் முதல் நாளில் செய்த வசூல் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் இவர் தற்போது ஹெச் வினோத் உடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
துணிவு திரைப்படத்தில் ஒன் மேன் சோ காட்டிய அஜித்தின் மிரட்டலான லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அஜித்தின் துணிவு திரைப்படத்துடன் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் இன்று வெளியாகி உள்ளது. எட்டு வருடங்கள் கழித்து அஜித், விஜய் படங்கள் ஒரே தினத்தில் மோதி கொண்டதால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படங்களை கொண்டாடி பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது வெளியான துணிவு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது துணிவு திரைப்படத்தின் ஆன்லைன் புக்கிங் மட்டுமே 13 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டும் 10 கோடி வரை வசூல் செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது துணிவு படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது ஆகையால் வரும் காலங்களில் துணிவு அதிக வசூல் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் துணிவு படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 25 முதல் 30 கோடி வரை வசூல் அளிக்கும் என்று சினிமா வட்டாரத்தில் கூறி வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் துணிவு திரைப்படம் வெளிநாடுகளிலும் வேற லெவலில் கலெக்ஷன் பெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் துணிவு படத்தின் வசூல் வேட்டை இனி வரும் நாட்களில் உயர்ந்து கொண்டே இருப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என கூறப்படுகிறது.