முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய 6 திரைப்படங்கள்.. கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட விஜய்..

பொதுவாக எந்த நடிகரின் திரைப்படம் அதிக வசூலை பெறுகிறதோ அவர்கள் தான் ஆட்டநாயகன் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவர்கள் தான் வசூல் மன்னனாகவும் இருக்கிறார்கள் அந்த வகையில் ஒரு நடிகரின் திரைப்படம் வெளியானால் முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்கள் அதிகமாக கொண்டாடுவார்கள்.

அப்படித்தான் ஒவ்வொரு முன்னணி நடிகர்களுக்கும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் அதிக லாபத்தை பார்த்தது எந்த திரைப்படம் என்பதை இங்கே காணலாம் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகிய திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 550 கோடி தான் ஆனால் இந்த திரைப்படம் மொத்தமாக 1387 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதிலும் முதல் நாளிலேயே இந்திய அளவில் 223 கோடி லாபத்தை பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாகுபலி 2 எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பாகுபலி 1. இந்த திரைப்படம்  நல்லா வரவேற்பு பெற்றது இதனை தொடர்ந்து இரண்டாவது பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 250 கோடி தான் ஆனால் 1700 கோடி முதல் 1800 கோடி வரை வாசுல் செய்து சாதனை படைத்தது முதல் நாள் வசூலாக 218 கோடி லாபத்தை பெற்றது.

மூன்றாவது இடத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமலஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கல்கி இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அதனால் இந்த திரைப்படம் முதல் நாள் வசூல் 190 கோடி வரை லாபத்தை பெற்றது இந்த திரைப்படம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

நான்காவது இடத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகிய சலார் என்ற திரைப்படத்தில் பிரபாஸ் நடித்து இருந்தார் ஆக்சன் திரைப்படமாக வெளியாகிய இந்த திரைப்படம் சுமார் 270 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது ஆனால் இந்த திரைப்படம் மொத்தமாக 715 கோடி ரூபாய் வரை லாபத்தை பெற்று கொடுத்தது முதல் நாளில் 178.7 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

ஐந்தாவது இடத்தில் கேஜிஎப் 2 திரைப்படம் இந்த திரைப்படமும் பிரசாந் நீல் அவர்கள் நடிப்பில் வெளியானது 2022 ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது ஆனால் இந்த திரைப்படம் 10 மடங்கு லாபத்தை கொடுத்தது மொத்தமாக 1250 கோடி ரூபாய் லாபத்தை கொடுத்தது அதேபோல் முதல் நாளில் 165 கோடி ரூபாய் வசூல் செய்தது.

ஆறாவது இடத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய லியோ திரைப்படம் இருக்கிறது இந்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியிருந்தார் படத்தின் பட்ஜெட் 350 கோடி ஆனால் ஒட்டு மொத்த வசூல் 620 கோடி ஆனால் முதல் நாளில் 149.5 கோடி ரூபாய் வசூல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது இப்படி முதல் ஆறு இடத்தை இந்த ஆறு திரைப்படங்களும் பிடித்துள்ளது.